தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திரையுலகமே எதிர்த்தாலும் தேமுதிகவை ஒன்றும் செய்ய முடியாது' - Rajinikanth political entry

ராமநாதபுரம்: ரஜினிகாந்த் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்த்தாலும் தேமுதிகவை ஒன்றும் செய்ய முடியாது என விஜயகாந்த் மகன் பிரபாகரன் தெரிவித்தார்.

dmdk
dmdk

By

Published : Dec 16, 2020, 10:57 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நடிகர் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்குவதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இத்தனை ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக வராதவர், தற்போது வருகிறார்.

பிரபாகரன்

திமுக, அதிமுக என்னும் இரண்டு பெரிய கட்சிகள் கோலோச்சிய காலத்திலேயே அவற்றை எதிர்த்து களம் கண்டது தேமுதிக. ரஜினிகாந்த் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டுவந்து எதிர்த்தாலும் தேமுதிகவை ஒன்றும் செய்ய முடியாது.

இப்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் மூன்றாவது அணி என்று ஒன்று அமைத்தால், அது தேமுதிகவால்தான் முடியும். எங்களைத் தவிர வேறு யாராலும் மூன்றாவது அணி அமைக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்

ABOUT THE AUTHOR

...view details