ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி அருகே குருத்த மண் குண்டு பகுதியில் சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை பொதுமக்கள் கப்பல் ஆற்று ஊரணியை கடந்து மயானத்திற்கு எடுத்து செல்லும் அவல நிலை தொடர்கிறது.
இந்நிலையில் அப்பகுதியில் உயிரிழந்த ஒருவரின் உடலை பொதுமக்கள் கப்பல் ஆற்று ஊரணியை கடந்து மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.