தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ராமநாதசுவாமி கோயில் தங்குமிடத்தின் பெயரை மாற்றக்கோரி போராட்டம்’ - nam thamilar party protest

ராமநாதபுரம்: ராமநாதசுவாமி கோயில் தங்குமிடத்தின் பெயரை தமிழில் மாற்றக் கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'ராமநாதசுவாமி கோவில் தங்குமிடத்தின் பெயரை மாற்றக் கோரி வலுக்கும் போராட்டம்’
'ராமநாதசுவாமி கோவில் தங்குமிடத்தின் பெயரை மாற்றக் கோரி வலுக்கும் போராட்டம்’

By

Published : Aug 11, 2020, 8:15 PM IST

இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தங்கும் விடுதிக்கு யாத்ரி நிவாஸ் என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இந்தி பெயரை மாற்றிவிட்டு தமிழில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி என பெயர் வைக்க நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தும் விதமாக இன்று (ஆகஸ்ட் 11) திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சேலத்தில் ரேஷன் அரசி கடத்தலைத் தடுக்க வாலிபர் சங்கம் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details