தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்திலுள்ள நகைக்கடையில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை! - நகைக்கடையில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை

ராமநாதபுரம்: நகைக்கடையில் பணிபுரியும் இளைஞர் ஒருவருக்கு தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கருதி, என்ஐஏ அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

nia officers are investigating the Ramanathapuram youth

By

Published : Nov 3, 2019, 1:01 PM IST

Updated : Nov 3, 2019, 1:13 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள மாயாகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அஹமத்துல்லா. இவர், 2016ஆம் ஆண்டு துபாயில் பணிபுரிந்த போது அங்கிருந்த பிரிவினைவாத அமைப்புக் கூட்டங்களில் பங்கேற்றதாக அறிய வருகிறது. துபாயிலிருந்து திரும்பிய அவர், ராமநாதபுரத்திலுள்ள நகைக் கடையொன்றில் தற்போது வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் மாயாகுளத்தில் உள்ள அவரது வீட்டில் என்ஐஏ அலுவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர் பணிபுரியும் நகைக் கடைக்குச்சென்று நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். பின்னர் அஹமத்துல்லாவிடம் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

என்ஐஏ அலுவலர்கள் சோதனை நடத்திய கடை

இதையும் படிங்க:’புதிய கல்விக் கொள்கையை உயிரைக் கொடுத்து தடுப்போம்’

Last Updated : Nov 3, 2019, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details