ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, அதிநவீன வசதிகளுடன் புதிய பாலம் கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ரூ. 280 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது.
கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. கடலின் மீது 2,078 மீட்டர் தூரம் வரை, இந்த பாலம் அமைக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
இதனால் பல மாதங்களாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் புரெவி புயல் காரணமாக பணிகள் தொடங்க மீண்டும் காலம் தாமதமானது.