ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் தீவிரவாதிகள் கோயிலுக்குள் நுழைந்தால் அவர்களை எவ்வாறு பிடிப்பது என்பது தொடர்பாக ஒத்திகை இன்று (ஆக.07) நடைபெற்றது. இதற்காக டம்மி கண்ணீர் வெடிகுண்டை வெடிக்கச் செய்து பாதுகாப்பு ஒத்திகையில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ஒத்திகை
மேலும் கோயிலுக்கு வெளியே இருக்கும் மக்களை பாதுகாப்பு படையினர் தீவிரவாதி போல் துப்பாக்கி முனையில் பணயக் கைதியாக பிடித்து கோயிலுக்குள் அழைத்து செல்கிறார். அவரை பிடிக்க கண்ணீர்ப்புகை வெடிகுண்டை வெடிக்க வைத்து புகை மண்டலமாக மாற்றி பணயக் கைதியை தப்பிக்க வைப்பது போன்று ஒத்திகை நடைபெற்றது.