ராமநாதபுரம் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. கரோனா தொற்று 2ஆவது அலையால் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால், கோயிலுக்கு பக்தர்களின் வருவதில்லை. இதனால் கோயிலுக்கு பக்தர்களை நம்பி இருந்த யாசகர்கள் பொது முடக்க நேரத்தில் அன்றாட உணவில்லாமல் தவித்து வந்தனர். இதனை அறிந்த ராமேஸ்வரம் நண்பர்கள் இயக்கம் என்ற அமைப்பினர் சார்பில், கோயிலைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட யாசகர்களுக்கு மதிய உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.