தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இதற்குமேல் எங்களை அழைக்காதீர்கள் - கையெடுத்து கும்பிட்ட நமிதாவின் கணவர் - TN assembly

ராமநாதபுரம்: இதற்கு மேல் பரப்புரைக்கு எங்களைக் கூப்பிடாதீர்கள் என பாஜகவினரிடம் நமிதாவின் கணவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

namitha
நமிதா

By

Published : Mar 31, 2021, 8:44 PM IST

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடும் குப்புராமுவை ஆதரித்து நடிகை நமிதா இன்று (மார்ச் 31) பல்வேறு பகுதிகளில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் தொகுதியில் நமிதா பரப்புரை

பரப்புரையை முடித்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பிய நமிதாவிடம், பாஜகவினர் மேலும் சில இடங்களுக்குப் பரப்புரை மேற்கொள்ள வரும்படி அழைத்ததாகத் தெரிகிறது.

அப்போது, அவர்களிடம் நமிதாவின் கணவர், "வேட்பாளருடன் ஓரிடத்திலும், பத்திரிகையாளருடன் ஒரு இடத்திலும், இதுபோக இரண்டு இடங்களிலும் பரப்புரை மேற்கொண்டுள்ளோம்.

வேட்பாளர் பிஸியாக இருந்தால் நாங்கள் என்ன செய்வது? நாங்கள் வாக்குச் சேகரிப்பை முடித்துவிட்டோம். இதற்குமேல் எங்களை அழைக்காதீர்கள்" என்று கையெடுத்துக் கும்பிட்டார். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத்திணிப்பு; ஊடகங்கள் மீது ஓபிஎஸ்-இபிஎஸ் பாய்ச்சல்!

ABOUT THE AUTHOR

...view details