ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சங்கத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில்,
தங்களது சமுதாயத்தை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு - Audio issue
ராமநாதபுரம்: தங்களது சமுதாயத்தைப் பற்றி இழிவாக பேசி வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சில தினங்களுக்கு முன் தங்களது சமுதாயத்தைப் பற்றியும், பெண்கள் குறித்தும் இழிவாக பேசி அடையாளம் தெரியாத நபர் வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், அந்த வீடியோ பதிவு தங்களது சமுதாயத்தினரை மிகுந்த மனவேதனை அடையச் செய்ததாகவும், அதை பதிவிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடமும், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனாவிடமும் குறிப்பிட்ட சமதாயத்தினர் அளித்தனர். மேலும் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.