மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கடந்த 4 நான்கு நாட்களாக விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி., - Farmers protest against agricultural law
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராமநாதபுரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் நவாஸ்கனி எம்.பி., பங்கேற்றார்.
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி நவாஸ்கனி
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த போராட்டத்தில் பங்கேற்றதோடு, மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் சட்டம் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்கி கூறினார். இதில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஹாஜி வரிசை முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:டெல்லியில் தற்கொலை போராட்டம்! - அய்யாக்கண்ணு அறிவிப்பு!