தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்: எம்.பி நவாஸ் கனி திறந்துவைத்தார்!

இராமநாதபுரம் புதிய பேருந்துநிலையத்தில், தனியார் அறக்கட்டளை உதவியுடன் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி திறந்துவைத்தார்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்

By

Published : Jan 18, 2021, 11:21 PM IST

இராமநாதபுரம்:இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் அறக்கட்டளை உதவியுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இராமநாதபுரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடியாதது, அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. அதற்கான உதாரணம் தான் இராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மணிகண்டன் தர்ணா செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக, காங்கிரஸின் மதச்சார்பற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்தக் கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இராமநாதபுரம்- கீழக்கரை மேம்பால பணிகள் தாமதத்துக்கு மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்தி கொடுக்காததே காரணம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தலின் படி ஒரு ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details