உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா வைரஸை தடுப்பதற்காக, பிரதமர் மோடி மக்களிடம் நிதி கோரியுள்ளார். இதில் துணை குடியரசு தலைவர், எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள், தொழிலதிபர்கள் என பலர் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை, தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளுக்காக ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய சட்டமன்ற தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது என இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.
எம்.பி நவாஸ் வெளியிட்ட அறிக்கை இதையும் படிங்க: கரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்யும் திமுக எம்பி -கே.பி. அன்பழகன் குற்றச்சாட்டு