உலகம் முழுவதும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட 14 இடங்களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி முதல் தாய்ப்பால் வங்கிசேவை தொடங்கப்பட்டது. இதில் 87 தாய்மார்கள் தங்களது தாய்ப்பாலை தானமாக வழங்கினர்.
அதே போல் இந்த ஆண்டில் 112பேர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கியில் இதுவரை 199 தாய்மார்களிடம் இருந்து 20ஆயிரத்து320 மில்லி லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில் 19ஆயிரத்து530 மில்லி லிட்டர்,தாய்ப்பால் 132 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் பெறப்படும் தாய்ப்பாலில் உள்ள பாக்டீரியாக்கள் நீக்கப்படுவதற்கு முதலில் கொதிக்க வைக்கப்படுகிறது.