தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாடியதை கண்டித்த தாய்: தற்கொலைக்கு முயன்ற சிறுமிகள் - தற்கொலைக்கு முயன்ற சிறுமிகள்

ராமநாதபுரம்: வீட்டின் அருகே விளையாடியதை தாய் கண்டித்ததால் எலி மருத்து குடித்த ஐந்து சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

By

Published : Aug 14, 2020, 5:22 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த கட்டாலங்குளம் கிராமத்தில் ஐந்து சிறுமிகள் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுமியின் தாயார் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள், எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பெற்றோர்கள், சிறுமிகளை மீட்டு சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சாயல்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிறுமிகளின் உடல் நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details