மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும் அதை ரத்து செய்யக் கோரியும் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தில் உலமா சபை சார்பில் கண்டன பொதுக்கூட்டம் சந்தை திடல் பகுதியில் நடந்தது. இதில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கூறி பதாகைகளை ஏந்தி நின்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நவாஸ் கனி, ’இந்திய பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்ப காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, குடியுரிமை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்துவருகிறது.