தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடியின் பிறந்த நாள்: அன்பளிப்பாக 613 கிலோ எடை கொண்ட கோயில் மணி!

ராமநாதபுரம்: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு ராமேஸ்வரத்திலிருந்து 613 கிலோ எடை கொண்ட கோயில் மணியை நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பரிசளிப்பதற்கு எடுத்து செல்லப்படுகிறது.

613 கிலோ எடை கொண்ட கோயில் மணி
613 கிலோ எடை கொண்ட கோயில் மணி

By

Published : Sep 17, 2020, 3:02 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாள் விழாவில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 3 மணி நேரம் சிறப்பு யாகம் காலை நடைபெற்றது.

அதற்குப் பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் மேற்கு கோபுரத்தில் இருந்து லீகல் ரைசட் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் மூலமாக ராமேஸ்வரத்தில் இருந்து, நாகர்கோவிலில் செய்யப்பட்ட 5 அடி உயரம் கொண்ட 613 கிலோ எடையுடைய வெண்கல மணியை அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயிலுக்கு அளிக்க எடுத்துச் செல்லப்படுகிறது.

சிறப்பு யாகம் நடக்கும் காட்சி

இந்த வாகனத்தை லீகல் ரைட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் ராஜலட்சுமி மண்டா இன்று (செப்.17) தொடங்கி 21 நாட்களில் ஆந்திரா, கர்நாடகா, மகாராட்டிர, டெல்லி வழியாக 4,552 கிலோமீட்டர்கள் கடந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி ராமர் கோயிலை சென்றடைகிறார்.

இதையும் படிங்க:மோடி பிறந்தநாளை வேலை வாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கும் காங்கிரஸ்!

ABOUT THE AUTHOR

...view details