ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 158 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 15 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, 2,557 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 255 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (ஜூன் 9) கரோனா தொற்று குறித்து குறி நவீன கோடாங்கி என்கிற நூதன விழிப்புணர்வு ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது.