ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான கருணாஸ், மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சீமானின் அரசியல் கீழ்த்தரமானது - கருணாஸ் எம்.எல்.ஏ. - Seeman slammed rajiv
ராமநாதபுரம்: சீமானின் அரசியல் கீழ்த்தரமானது என திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.
விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை கொன்றதாக அறிவிக்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனே அது ஒரு துன்பியல் நிகழ்வு என்றுதான் கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு போர்க்களத்தில் நின்று போரிட்டவர்கள்போல கூறிவருகின்றனர். ஈழத்தமிழர்களின் உயிர் தியாகத்தை தன்னுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்துவது என்பது என்னை பொறுத்த வரைக்கும் கீழ்த்தரமானது" என்றார்.