தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.25 லட்ச மருத்துவ உபகரணங்கள் வழங்கிய எம்எல்ஏ கருணாஸ் - Tamil Nadu chief minister

ராமநாதபுரம்: திருவாடானை அரசு மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை எம்எல்ஏ கருணாஸ் வழங்கினார்.

MLA karunas
MLA karunas

By

Published : Jul 8, 2020, 7:35 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அறுவைச் சிகிச்சை சம்பந்தமான படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவ உபகரணங்களும், எக்ஸ்ரே, இசிஜி, ஐசியு கட்டில், ஆக்ஸிஜன் அளிக்கும் இயந்திரம் உள்ளிட்ட மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு தனது தொகுதி சட்டப்பேரவை நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாயை எம்எல்ஏ கருணாஸ் ஒதுக்கினார்.

அந்தத் தொகையில் வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை கருணாஸ் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு தலைமை மருத்துவர் வெங்கடேஷ் முன்னிலையில் வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை அமைச்சரின் ஒப்புதல்படி, அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் பயன்பெறுவர்.
மேலும் அவசரக் காலத்தில் மக்களின் உயிரைக் காக்கவும் உபகரணங்கள் பயன்படும். தலைமை மருத்துவர் பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் கூறியுள்ளார். அதையும் தமிழ்நாடு முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டுசென்று, விரைவில் சரிசெய்யப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details