ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கருணாஸ் அம்மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாடனை தொகுதிக்குட்பட்ட 22 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில கட்சி பிரமுகர்கள் பணம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.
‘அமைச்சர் மணிகண்டன் பதவி பறிபோனதற்கு நானும் ஒரு காரணம்’ - எம்எல்ஏ கருணாஸ் - former minister manikandan
ராமநாதபுரம்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு நானும் ஒரு காரணம் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் குறித்த கேள்விக்கு, "அமைச்சர் மணிகண்டன் அவரின் செயல்பாடினாலே நீக்கப்பட்டுள்ளார். ஒரு அமைச்சரின் நீக்கத்தை அம்மாவட்டத்தின் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்தது வேதனைக்குரிய விஷயம். மற்றவரின் துன்பத்தில் சந்தோஷம் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருவாடனை தொகுதியில் என்னை பணியாற்ற விடாமல் தடுப்பதாக முதலமைச்சரிடம் நேரடியாக குற்றம் சாட்டிய ஒரே நபர் நான் தான், அதனால் அவர் பதவி பறிபோனதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்" என கூறினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட பிறகு திருவாடனை தொகுதிக்கு கருணாஸ் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.