தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புண்ணிய தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு எப்போது அனுமதி? - ராமேஸ்வரம் திருக்கோயில்

ராமநாதபுரம்: கரோனா நோய்த்தொற்று முழுமையாக குறைந்த பின்னரே ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

f
f

By

Published : Sep 26, 2021, 6:51 AM IST

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலுக்கு வருகை புரிந்தார்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராமநாதசாமியையும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து சென்றவர் திருக்கோயிலில் உள்ள தங்க தேர், வெள்ளி தேர், உள்ளிட்டவை பழுது ஏற்பட்டு பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லாததை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின் கோயிலில் உள்ள பல்வேறு பகுதிளில் சென்ற அவர் கோவிலில் உள்ளே தீர்த்த கிணறுகளை பார்வையிட்டார்.

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் பயன்பாடின்றி கிடக்கும் ஒரு தங்க தேர், ஒரு வெள்ளி தேர், மூன்று மர தேர்கள் உடனடியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட கரோனா நோய்த்தொற்று முற்றிலுமாக குறைந்த பின்னரே அனுமதிக்கப்படுவர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில் ஆக்கிரமிப்பு நில மீட்பு வேட்டை தொடரும் - அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details