தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத கட்சி திமுக: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: திமுக சார்பில் அறிவிக்கப்படும் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படுவது இல்லை என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

By

Published : Dec 31, 2020, 7:06 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜனவரி 2ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவுள்ளார். இந்நிலையில் பரமக்குடி தனியார் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.31) நடைபெற்றது.

இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி, மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "திமுக சார்பில் அறிவிக்கப்படும் தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால் அதிமுக சார்பில் அறிவிக்கப்படும் அனைத்து தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அம்மா மினி கிளினிக் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.

இதையும் படிங்க: பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்!

ABOUT THE AUTHOR

...view details