ராமநாதபுரம்: கரோனா முதல் அலையைப் போல இரண்டாவது அலையையும் கடந்து போக முடியும் என, அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3.75 லட்சம் குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்களில், அரிசி அட்டைதாரர்களுக்குத் தமிழ்நாடு அரசு அறிவித்த கரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 2 ஆயிரம் ரூபாயை நேற்று (மே.15) பழைய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
முன்னதாகப் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முக்கியமான முதல் ஐந்து கோப்பில் கையெழுத்திட்டார். கரோனா பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நடவடிக்கை, ஆவின் பால் விலை மூன்று ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் உள்ளிட்ட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.