கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால், வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு ரயில்கள் மூலமாக தொடர்ந்து கடந்த சில நாள்களாக சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு தொடங்கியது முதல் திருநெல்வேலியில் உள்ள பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர், தங்களின் சொந்த மாநிலத்திற்கு தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று இவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில், கூடுதல் ரயில் பெட்டிகளோ கூடுதல் ரயில்களோ இல்லாத காரணத்தினால், 23 பெட்டிகளைக் கொண்ட ரயில் ஒன்று, 52 நாட்களுக்குப் பிறகு பாம்பன் பாலத்தைக் கடந்து சென்று, தொழிலாளர்களை ராமேஸ்வரத்திற்கு இன்று காலை அழைத்து வந்தது.