தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போட்டி போட்டு மீன்களை வாங்கிய வியாபாரிகள் - Fishes

ராமநாதபுரம்: பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் 63 நாள்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, திரும்பினர். தொடர்ந்து நடைபெற்ற விற்பனையில் வியாபாரிகள் போட்டி, போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்
வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்

By

Published : Jun 18, 2021, 10:28 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர். 63 நாள்களுக்குப் பின் நேற்று மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இன்று காலைமுதல் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்துக்கு திரும்பத் தொடங்கினர்.

63 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு விலை மீன், கட்டா, கிளாத்தி, காரல், நெத்திலி, சீலா, பாறை, முரல், நகரை போன்ற மீன்களும் உள்பட ஒவ்வொரு படகுக்கும் சுமார் 500 கிலோமுதல் ஒரு டன் வரையிலும் மீன்கள் கிடைத்தன.


அதைத்தொடர்ந்து கரை திரும்பிய மீன்கள் ஏலம்விடும் கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறிய ரக மீன்கள், பெரிய ரக மீன்கள், உயர் ரக மீன்கள் என தனித்தனியாகப் பிரித்து ஏலம் நடந்தது. வியாபாரிகள் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details