தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவளப்பாறைகளை சேதப்படுத்துவதாக மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதிய ரயில் பாலத்திற்காக பவளப்பாறைகளை சேதப்படுத்துவதாகக் கூறி பாம்பன் பாலத்தில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 2, 2021, 8:28 AM IST

ராமநாதபுரம்: வழித்தடத்திற்காக பவளப் பாறைகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் கட்டுமான நிறுவனமொன்று சேதப்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் தீவையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம். நூறு ஆண்டுகள் கடந்து கம்பீரமாக நிற்கக் கூடிய ரயில் பாலம் அருகில், புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு சுமார் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பாம்பன் மேற்கு கடற்கரையில் இருந்து கடலில் தரைவழிப் பாலம் அமைத்து புதிய பாலத்திற்கு தூண்கள் அமைத்து வருகின்றனர். இதில் கடலோரத்தில் வசிக்கும் மீனவர் குடிசைகள் கடல் அரிப்பில் சேதமாகும் எனப் பாம்பன் மீனவர்கள் புகார் எழுப்பியதால் மிதவை படகில் கட்டுமான பொருள்களை எடுத்து செல்ல கட்டுமான நிறுவனம் முடிவு செய்தது.

ஆனால் அவற்றிற்கு இடையூறாகப் பவளப் பாறைகள் இருந்ததால் அவற்றை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றி புதிய வழித்தடத்தை உருவாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது. இதனால் மீன்வளம் அழிந்து, கடல் அரிப்பில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவும் என மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

பவளப் பாறைகளுக்கு சேதாரம் விளைவிக்காமல், அதை உடைத்து தோண்டி எடுக்காமல் புதிதாக ரயில் பாலம் அமைக்க வேண்டும் எனப் பலமுறை மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கு இப்பகுதி மீனவர்களும், மதிமுக, பல அமைப்பைச் சேர்ந்தவர்களும் பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள் நேற்று (ஜூன்.1) புதிய பாலத்திற்காகப் பவளப்பாறைகளை சேதப்படுத்துவதாகக் கூறி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட மதிமுக பொறுப்பாளர் பேட்ரிக் தலைமை வகித்தார்.

இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு' - வைகோ

ABOUT THE AUTHOR

...view details