ராமநாதபுரம் காவல் துறை டிஐஜியாக பணியாற்றிவந்த ரூபேஷ் குமார் மீனா தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை தெற்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக பணி புரிந்து வந்த மயில்வாகனன் பதிவி உயர்வு பெற்று ராமநாதபுரம் டிஐஜியாக மாற்றப்பட்டார்.
ராமநாதபுரத்தின் புதிய டிஐஜியாக மயில்வாகனன் பொறுப்பேற்பு - ராமநாதபுர புதிய டிஐஜி
ராமநாதபுரம்: புதிய டிஐஜியாக மயில்வாகனன் இன்று( ஜூலை 2) பொறுப்பேற்றுக்கொண்டார்.

மயில்வாகனன்
இன்று( ஜூலை 2) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள டிஐஜி வளாகத்தில் தனது பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது தஞ்சாவூருக்கு மாற்றப்பட்ட ரூபேஷ் குமார் மீனா தன் பொறுப்புகளை மயில்வாகனனிடம் ஒப்படைத்தார். மயில்வாகணன் முன்பே ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.