ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாயாகுளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சரஸ்வதி, பஞ்சவள்ளி ஆகியோர் தலா 664 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ் முன்னிலையில் குலுக்கல் சீட்டு முறையில் வேட்பாளர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சரஸ்வதி என்பவர் வெற்றி பெற்றார்.