இராமநாதபுரம்:பரமக்குடி அருகே அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன். இவருடைய மகன் கருமலையான் (115). மனைவி சிங்கால். இவருக்கு இரண்டு மகன்கள், மகள்களும் உள்ளனர். மனைவி சிங்கால், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கருமலையான் சிலம்பம் மீது ஆர்வம் கொண்டதால், சிறுவயதிலிருந்தே சிலம்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு வந்தார்.
மேலும், சிலம்பம் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாகத் தொடர்ந்து அண்டக்குடி கிராம இளைஞர்களுக்குச் சிலம்பம் கற்பித்து வந்தார். தற்போது, அவருக்கு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 18 பேரன், பேத்திகளும், 29 கொள்ளு பேரன், பேத்திகளும் உள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த இவர் திடீரென இன்று (மே.11) அதிகாலை உயிரிழந்தார்.