தமிழ்நாடு முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட நடிகை சாந்தினி திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக கடந்த வாரம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை மதுரை, ராமநாதபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மணிகண்டனின் மனைவி வசந்தி, மதுரையில் மருத்துவராக பணி செய்து வருகிறார். இவர் ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக்கை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.