ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த 27ஆம் தேதி கார்த்திகை முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து துளசிமணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
26ஆம் தேதியான இன்று மண்டலபூஜை நடைபெறுவதையொட்டி, அதிகாலை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மண்டலபூஜை மற்றும் ஆராட்டு விழா நடைபெற்றது.
ஆராட்டு விழாவிற்கு குருசாமி மோகன் தலைமையில் வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.