தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொண்டி அருகே பறவைகளை வேட்டையாடியவருக்கு அபராதம்! - இராமநாதபுரம் நியூஸ்

இராமநாதபுரம்: தொண்டி அருகே பறவைகளை வேட்டையாடிவருக்கு, வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம்

By

Published : Apr 29, 2020, 7:05 PM IST

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பறவைகளை சிலர் வேட்டையாடி வீட்டில் வைத்து இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், மாவட்ட வனச் சரக அலுவலர் சதீஸ் தலைமையில் வனவர் ராஜேஷ், வனக் காப்பாளர் ஜோசப், வனப் பாதுகாவலர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் தீர்தாண்டதானம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில் வீரைய்யா (60) என்பவரின் வீட்டிலிருந்து வெளிநாட்டு பறவைகள் கண்டறியப்பட்டன.

வெள்ளை அரிவாள் மூக்கன் முன்று, வல்லூது ஆறு, கதுவாலி ஐந்து என மொத்தமாக 14 பறவைகளுடன், அவற்றைப் பிடிக்க பயன்படுத்திய வலை, கண்ணிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொண்டி அருகே பறவைகளை வேட்டையாடியவருக்கு அபராதம்!

இதையடுத்து வீரைய்யாவை விசாரித்த உயிரின காப்பாளர் மாரிமுத்து, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் அப்பறவைகளை சக்கரகோட்டை கண்மாயில், வனத்துறையினரால் பாதுகாப்பாக விடப்பட்டது.

இதையும் படிங்க:சமூக வலைதங்களில் பிரதமரை அவதூறாக பேசிய இரண்டு பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details