ராமநாதபுரம்: பரமக்குடியை அடுத்த சத்திரக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கல்லெறிந்து வழிப்பறி நடைபெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த காணொலி காவல் துறையினரின் கவனத்துக்கு சென்ற நிலையில், அந்த சாலையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்தனர்.