இராமேஸ்வரம், தனுஷ்கோடி சாலையில் நள்ளிரவில் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் தனிப்பிரிவு காவலர் பிரபுத்துரை தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாலை 2 மணி அளவில் சந்தேகத்திற்கிடமாக வேர்க்கோடு நோக்கி வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்திற்குள் பெட்டி பெட்டியாக 301 மது பாட்டில்கள் இருந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் மது பாட்டில்களை ஏற்றிவந்தவர் எம்ஆர்டி நகரைச் சேர்ந்த மணிவேல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் மது பாட்டில்களை கடத்திவந்த ஆம்னி வேனை பறிமுதல் செய்து ஜெட்டி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மணிவேல் மீது வழக்குப்பதிவு செய்து ஜெட்டி துறைமுக விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க...மாட்டிக்கொள்ளாமலிருக்க சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க்கையும் திருடிய பலே கொள்ளையர்கள்