ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சொந்த ஊராகக் கொண்டவர் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக பரமக்குடியில் கருப்பு ராஜா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பரமக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட கருப்பு ராஜா 3 ஆயிரத்து 488 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
பரமக்குடியில் மநீம தோற்றதற்கு கமல்தான் காரணம்: வெளியான உண்மைகள்!
ராமநாதபுரம்: கமல் பிறந்த ஊரான பரமக்குடியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் டெபாசிட்டை இழந்ததற்கு கமல் பரப்புரை செய்யாததே காரணம் என கூறப்படுகிறது.
Makkal needhi maiam Kamal Election2021 Paramakudi
இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரமக்குடியில் பரப்புரை செய்யாமல் இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. பரப்புரைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டது.
ஒருவேளை ராமநாதபுரம் மாவட்டத்தில் கமல்ஹாசன் பரப்புரை செய்திருந்தால் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பெற்றிருக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.