ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ அதிமுக, பாஜக கூட்டணியில் வேட்பாளராக நிற்கும் குப்புராம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். அப்படி வெற்றி பெற செய்தால் ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்கள் , குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், இலவச வாஷிங் மெஷின் ஆகியவை வழங்கப்படும்.
ராமேஸ்வரத்தில் நடிகை நமீதா பரப்புரை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை ஒரே நாளில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார். இடம் இல்லாத ஏழைகளுக்கு இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க :உறுப்புதான விழிப்புணர்வின் விதை- டிஜிபி சுனில் குமார்!