தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உசிலம்பட்டியில் சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்! - usilampetti student strike

மதுரை: உசிலம்பட்டியில் சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் சாலை மறியல்
உசிலம்பட்டியில் சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

By

Published : Mar 3, 2021, 10:45 AM IST

68 சமுதாயங்களை உள்ளடக்கிய மக்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, டிஎன்டி எனும் முழுமையான சான்றிதழ் வழங்கிட வழியுறுத்தி வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீர்மரபினருக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதேபோல், வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டி மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர், கல்லூரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் 68 சமுதாய மக்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 7 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வாபஸ் பெறக்கோரியும், சீர்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி காவலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மதுக்கடையை பூட்டிய ஏடிஎஸ்பி!

ABOUT THE AUTHOR

...view details