திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த தவமணி. இவர் தனது லாரியில் பிளீச்சிங்பவுடர் ஏற்றிக் கொண்டு மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பிளீச்சிங் பவுடர் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் படுகாயம்! - லாரி ஓட்டுநர்
ராமநாதபுரம்: பரமக்குடியில் பிளீச்சிங் பவுடர் ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.
பிளீச்சிங் பவுடர் ஏற்றிவந்த லாரி விபத்து: ஓட்டுநர் படுகாயம்!
அப்போது, பரமக்குடியை அடுத்த காரைக்குடி விலக்கில் லாரி நிலை தடுமாறி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் தவமணி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சத்திரக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த சத்திரக்குடி காவல் துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.