ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ளது மேலக்கிடாரம். இப்பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கு 13 வயது சிறுவன், தனது தந்தையின் மொபைல்போனில் ஆன்லைன் கேம் விளையாடத் தொடங்கி, அதில் ’ஃபிரீ ஃபயர்’ என்கிற மொபைல் கேமிற்கு அடிமையாகியுள்ளான்.
தொடர்ந்து, கேம் அப்டேட், ஆயுதங்கள் வாங்க என தனது தாயின் வங்கிக் கணக்கு கடவுச் சொல்லைப் பயன்படுத்தியும் 1000, 1500 ரூபாய்கள் என அவ்வப்போது அச்சிறுவன் செலவழித்து வந்துள்ளான்.
அதிர்ச்சி
இந்நிலையில், ராமநாதபுரம் வங்கியில் பணம் எடுக்கச் சென்ற பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தங்களது வங்கிக் கணக்கில், முன்னதாக ஒரு லட்சம் ரூபாய் இருந்தநிலையில், இவர்கள் சென்று விசாரித்தபோது 10 ஆயிரம் மட்டுமே இருந்துள்ளது. தொடர்ந்து இது குறித்து வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது, ஆன்லைன் கேம் மூலமாக அத்தொகை அவர்களது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.