கரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்றூ (ஜூன்.14) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் 121 டாஸ்மாக் மதுபான கடைகளும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் குடிமகன்கள் சமூக இடைவெளியோடு காத்திருந்தனர்.