ராமநாதபுரம்: முதுகுளத்தூரிலிருந்து பூலாங்குளம், புதுவயல், புதுவலசை, கொட்டகுடி, அரசனூர், தேரிருவேலி ஆகிய ஆறு ஊர்களுக்கு நகரப் பேருந்துகளும் - திருச்சி, தேரிருவேலி ஆகிய ஊர்களுக்கு இரண்டு புறநகர்ப் பேருந்துகளும் என மொத்தம் எட்டு ஊர்களுக்குப் புதிய வழித்தடங்களை அமைச்சரும், முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜகண்ணப்பன் இன்று (ஜூலை 29) தொடங்கிவைத்தார்.
பின்னர் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு உதவித்தொகையினை வழங்கினார்.
டெல்லியை கரெக்ட் செய்த ஸ்டாலின்
பின்னர் அதிமுக, பாஜகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த 50 நபர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். முதுகுளத்தூர் சட்டப்பேரவை அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருகிறது. மாநிலத்தின் நலனுக்காக முதலமைச்சர் டெல்லியை கரெக்ட் செய்துவைத்துள்ளார். தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 217 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. விரைவில் அது 19 ஆயிரம் பேருந்துகளாக அதிகரிக்கப்படும்.