ராமநாதபுரம் கிருஷ்ணாநகர் 3ஆவது தெருவை சேர்ந்தவர், தாமரைச்செல்வம். இவரது தாத்தா சிவன் தனக்குச் சொந்தமான சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள 1000 சதுர அடி வீட்டுமனை நிலத்தை பாகப்பிரிவினை மூலம் தனது மகன் முருகானந்தத்துக்கு (தாமரைச்செல்வனின் தந்தை) அளித்துள்ளார். இந்த நிலத்தை முருகானந்தம் தனது நண்பரான பஞ்சவர்ணம் என்பவருக்கு வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு எழுதிக்கொடுத்தார்.
2010ஆண்டு முருகானந்தம் உயிரிழந்த பின், அவர் எழுதிக் கொடுத்த நிலத்தை பஞ்சவர்ணம், திருஉத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு அதே ஆண்டு ஏப்ரலில் கிரையமாக கொடுக்க போல போலி ஆவணம் தயாரித்துள்ளார்.