தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவிட்-19 : கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை - இராமேஸ்வரத்தில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

ராமநாதபுரம்: கோவிட்-19 காரணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் 31ஆம் தேதிவரை பக்தர்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இராமநாதசுவாமி கோவில்
இராமநாதசுவாமி கோவில்

By

Published : Mar 20, 2020, 11:00 AM IST

கோவிட்-19 காரணமாக, இந்தியா முழுவதும் 130க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது பரவுவதை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி,கல்லூரிகள் திரையரங்குகள், வணிக வளாகங்கள, உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தையும் தற்காலிகமாக மூடி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் உடற்பயிற்சி கூடம் 31ஆம் தேதி வரை திறக்க வேண்டாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இராமநாதசுவாமி கோவில்

இந்நிலையில் கோயில்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. பக்தர்களும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், கோவிட்-19 பரவுவதை தடுக்கும் பொருட்டு, இந்து அறநிலையத் துறை உத்தரவின் பேரில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உட்பட, தமிழ்நாட்டில் முக்கிய கோயில்கள் அனைத்தும் நாளை காலை 8:30 மணி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆகம விதிப்படி குருக்கள் கோயிலுக்குள் சென்று வழக்கமான பூஜை மட்டும் மேற்கொள்வார்கள், மற்றபடி யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையைச் சேர்ந்த டிஐஜி மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details