தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடர்களை விரட்டிய பொதுமக்கள்: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை! - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் அருகே தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் விரட்டும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. அதன் மூலம் திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருடர்களை விரட்டிய பொதுமக்கள்
திருடர்களை விரட்டிய பொதுமக்கள்

By

Published : Jul 6, 2021, 11:20 AM IST

ராமநாதபுரம்: கீழக்கரை பகுதியில் தொடர்ந்து 10 நாள்களாக இரவு நேரங்களில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், சைக்கிள் உள்ளிட்டவை திருடு போவதாக அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருடர்களை விரட்டிய பொதுமக்கள்

புயல் வேகத்தில் தப்பிய திருடர்கள்:

இந்நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் இருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதைக் கண்ட அப்பகுதி மக்கள், அவர்களை விரட்டி பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர்கள் புயல் வேகத்தில் தப்பி ஓடினர்.

இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:‘வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்க தான்’ - குடிபோதையில் போலீஸை கலாய்த்த இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details