தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல்: காட்டூரணி கிராமத்திற்கு சீல் வைப்பு! - காட்டூரணி கிராமத்திற்கு சீல் வைப்பு

ராமநாதபுரம்: ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், காட்டூரணி கிராமத்தினர் அக்கிராமத்தின் எல்லையை வேலி வைத்து அடைத்தனர்.

கரோனா
கரோனா

By

Published : Apr 29, 2021, 5:45 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூரணி பகுதியில், ஒரே தெருவில் 8 பேருக்கும், மற்றொரு தெருவில் 4 பேருக்கும் என, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுதவிர பலரும் தொற்று அறிகுறிகளுடன் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியது. தொடர்ந்து நேற்று(ஏப்.28) பேராவூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் தலைவர் மற்றும் சுகாதார பணியாளர்கள், கரோனா பாதித்தவர்களின் வீடுகளில் வேலி அமைக்கச் சென்றனர்.

அப்போது காட்டூரணி பகுதி பொது மக்கள் ஏராளமானோருக்குத் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், வெளிநபர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஊர் எல்லையில் வேலிஅமைத்து பாதுகாக்குமாறு கூறினர்.

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எல்லைப் பகுதியில் வேலி அமைக்கப்பட்டது. இதே போல, சேதுபதி நகர் பகுதியில் 4 பேருக்கும், பேராவூர் பகுதியில் 4 பேருக்கும் என, கரோனா தொற்று அதிகரித்து வேகமாகப் பரவி வருகிறது.

தொடர்ந்து ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரமோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கரோனா பாதித்த பகுதிகளில், நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி பாதிப்புக்குள்ளான வீடுகளை சுற்றி வேலி அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details