இராமநாதபுரம்: மாவட்டத்திற்கு புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சென்னை பூ மார்கெட் பகுதியில் காவல் துணை ஆணையராக பணிபுரிந்த கார்த்திக் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய காவல்துறை கண்காணிப்பாளராக கார்த்திக் ஐபிஎஸ் நியமனம்! - karthik ips
இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக கார்த்திக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
karthik ips
இராமநாதபுரம் எஸ்பியாக பணியாற்றிய வருண்குமார், கடந்த நவம்பர் மாதம் முதல் எஸ்பியாக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ், வருண்குமார் சாதி ரீதியாக செயல்படுகிறார் என தமிழ்நாடு முதலமைச்சரிடம் புகார் கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.