ராமநாதபுரம்: கமுதியில் நகைக் கடை வைத்திருப்பவர் கணேசன்(70). இவர் அதே பகுதியில் தனது மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பாக வசித்துவருகிறார்.
கணேசன் நேற்று (ஜூன். 28) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு அவரது மருமகள் சரண்யா 70 வகையான உணவுப் பண்டங்களை செய்து, அவருக்கு பரிமாறியுள்ளார்.
இட்லி, இனிப்பு பலகாரங்கள் தொடங்கி, புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் என சாதங்கள் தொட்டு பருப்பு வடை, உளுந்து வடை என வகை வகையாய் உணவுகள் சமைத்து அவற்றை பூப்போட்ட சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட கட்டிலில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார்.