ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுள்ததூர், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
சுவரின் மீது ஏறி நின்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
ராமநாதபுரம்: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி துணை மின் நிலையம் முன்பு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பேரிடர் காலங்களில் மட்டும் தங்களை பணிக்கு பயன்படுத்தி வருவதாகவும் அரசு தொடர்ந்து தங்களை புறக்கணித்து வருவதாகவும் ஒப்பந்த ஊழியர்கள் அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துவருகின்றனர் .
இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி துணை மின் நிலையம் முன் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சுவரின் மீது ஏறிநின்று தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் விதமாக முழக்கங்களை எழுப்பினர்.