புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்ட நீதிபதியால் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த மாதம் வங்க கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புரெவி புயலாக மாறியது அப்புயல் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால், கடற்கரையோரங்களில் வசித்து வந்த மீனவர்கள் தாழ்வான பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, மீண்டும் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிய நீதிபதி
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்துதலின் படி பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நிவாரண பொருட்களாக 25 கிலோ அரிசி மூட்டை மற்றும் 19 தொகுப்புகள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, இன்று (டிச.22) இராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதில் உள்ள கம்பிபாடு, பழைய தனுஷ்கோடி, பாலம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சுமார் 150க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரமதர் மோடி பாராட்டு