தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைந்த ஜே.கே.ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர், நடிகர் சின்னி ஜெயந்த், மனோபாலா அஞ்சலி

ராமநாதபுரம்: நடிகரும், முன்னாள் எம்பியுமான ஜேகே.ரித்திஷின் மறைவிற்கு அமைச்சர் மணிகண்டன், நடிகர் சின்னி ஜெயந்த், இயக்குநர் மனோபாலா நேரில் அஞ்சலி செலுத்தினர்.

JK Rithesh

By

Published : Apr 14, 2019, 11:57 AM IST

Updated : Apr 14, 2019, 12:11 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் (ஏப்ரல் 13) நடிகரும் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் இருதயத்திற்கு ரத்தம் எடுத்துச் செல்லும் ரத்த குழாய் வெடிப்பு காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா நகரில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களுக்கு உதவ வேண்டும் என்னும் கொண்ட மனிதர் இறந்துள்ளார். ஏற்கனவே இருதயத்தில் பிரச்னை காரணமாக அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு இருந்த அவர், தற்போது தேர்தல் பரப்புரைக்காக சென்று வீடு திரும்பிய நிலையில் நேற்றைய தினம் ரத்தக் குழாய் வெடிப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

பின்னர் நடிகர்கள் சின்னிஜெயந்த் மற்றும் மனோபாலா தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

அப்போது மனோபாலா கூறுகையில், நல்ல மனிதரை தமிழ் சினிமாவும் தமிழ்நாடும் இழந்திருப்பதாகவும், அனைத்து கலைஞருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மறைந்த ஜேகே ரித்தீஷ்க்கு அஞ்சலி
மேலும், சின்ன ஜெயந்த் பேசுகையில், "திரைப்படத்துறைக்கு 'கானல் நீர்' என்ற படத்தின் மூலம்தான் அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதரும் கூட. அவர் சினிமாவில் உள்ள அத்தனை கலைஞர்களுக்கும் உதவியாக இருந்தவர். அவரது இழப்பு சினிமா துறைக்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பாகும்" என தெரிவித்தார்.
Last Updated : Apr 14, 2019, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details